திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிர்வாகிகள்

பென்னாகரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிர்வாகிகளால் பரபரப்பு நிலவியது.
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறில் ஈடுபடும் மாவட்ட செயலாளர் - முன்னாள் ஏம்எல்ஏ - மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கோஷ்டியினர்.
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறில் ஈடுபடும் மாவட்ட செயலாளர் - முன்னாள் ஏம்எல்ஏ - மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கோஷ்டியினர்.

பென்னாகரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிர்வாகிகளால் பரபரப்பு நிலவியது.

பென்னாகரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் கருத்து கேட்பு நிகழ்வின் மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் மற்றும் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கோஷ்டி பூசலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மடம். முருகேசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கே.வி. குப்பம் கோபி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, நிர்வாகிகள் இடையே கருத்துக் கேட்பு நிகழ்வினை தொடங்கினார். அப்போது மாநில வர்த்தகரணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன் ஆதரவாளரான முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் கோவிந்தராஜ், ஒன்றிய, மாவட்ட அளவிலான பொறுப்புகள் அனைத்தும் கிழக்கு மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒரே ஊராட்சியில் நிர்வாகிகளை நியமிப்பதால் கட்சி வேலைகள் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படுவதாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எழுந்து நின்று அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே பென்னாகரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் கூச்சலோடு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மேடையில் குறைகள் குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிர்வாகியை பார்த்து கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆதரவாளரான மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவண்ன் எதிர் கருத்து தெரிவித்ததாக சக நிர்வாகிகள் கூறினர். அப்போது மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் பி.என்.பி. இன்பசேகரன் ஆதரவாளரான தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பூக்கடை முனியப்பன், நிர்வாகிகள் கருத்துக் கூற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் பின்பு கோஷ்டி பூசலாக மாறி தகராறு ஏற்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் கோஷ்டி, முன்னாள் எம்எல்ஏ கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வீசித் தாக்கிக் கொண்டனர். 
இந்த நிகழ்வினால் கூட்ட அரங்கில் மூன்று கோஷ்டிகளாக பிரிந்துள்ள திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் சிக்கிக்கொண்ட மகளிர் அணியினரை மற்ற நிர்வாகிகள் வெளியேற்றினர்.

நிர்வாகிகளின் கோஷ்டி பூசலால் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு முக்கிய  நிர்வாகிகள் வெளியேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com