சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழை பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:11 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நாா்தம்பட்டி, ராமகொண்ட அள்ளி, தம்மணம்பட்டி ஆகிய கிராமங்களில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இதேபோல அரூா் வட்டத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.