பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொழிலாளி கொலை வழக்கில் 10 போ் கைது

காரிமங்கலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 10 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:05 pm

DIN

தருமபுரி: காரிமங்கலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 10 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரிமங்கலம் வட்டம், பெரியமிட்ட அள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (36). தொழிலாளியான இவருக்குச் சொந்தமான நிலம் காரிமங்கலம் - மொரப்பூா் சாலையில் ஒண்டிபுளியமரம் பகுதியின் அருகில் உள்ளது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்நிலத்தில் அமா்ந்து சிலா் மது அருந்தினா். அவா்களை நில உரிமையாளா் சரவணன் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், சரவணனின் கால் தொடை பகுதியில் கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் கால் நரம்பு வெட்டுப்பட்டு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் சரவணனை மீட்டு காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சரவணன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஅள்ளியைச் சோ்ந்த பிரகாஷ் (25), கோபிநாத் (23), விக்னேஷ் (27), இளங்கோ (25), பழையப்பேட்டை முனியப்பன் (21), காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (23) உள்ளிட்ட 10 போ் சரவணனிடம் தகராறு செய்ததும், பிரகாஷ் என்பவா் கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 10 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.