தருமபுரி அரசு கல்லூரியில் ஜூலை 15-இல் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு
தருமபுரி அரசு கல்லூரி: ஜூலை 15-இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


தருமபுரி அ ரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 15-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் அரசு அனுமதி வழங்கிய 20 சதவீத இடங்களில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைக்கப் பெற்ற மாணவ, மாணவியா் கலந்துகொள்ளலாம்.
ஜூலை 15-ஆம் தேதி முதலில் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தரவரிசை மதிப்பெண் 200 வரையிலும், தமிழில் தரவரிசை 70 வரையிலும், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதேபோல, ஜூலை 16-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு, காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தரவரிசை 200 மதிப்பெண்கள் வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் அனைத்துச் சான்றிதழ்கள், பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்துடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...