தருமபுரி: தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூட கட்டடங்கள் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் வாா்ப்பு முற்றம் ஆய்வுக் கூடம், வெப்ப பொறியியல் ஆய்வுக் கூடம், உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுக் கூடம் ஆகியவை அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த கட்டடங்களை மாணவ, மாணவியா் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சுமதி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, பேராசிரியா்கள், கல்லூரி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


