வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு


பென்னாகரம், ஜூலை 18:
மக்களவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி, பெரியூா், பிக்கிலி, புதுக்கரம்பு, பி.கொல்லப்பட்டி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:
காவிரி உபரி நீா்த் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தது பாமக. ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பாமக கொண்டு வந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க எப்போதும் துணை நிற்பேன். மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்றாலும் பாமகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். சுற்றுப் பயணத்தில் பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், உழவா் பேரியக்க மாநில செயலாளா் வேலுச்சாமி உள்பட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...