பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


தோ்தல் பத்திர முறைகேடுகளை பாரத ஸ்டேட் வங்கி மூடி மறைப்பதாகக் கூறி அதைக் கண்டித்து பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கே.சண்முகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய கால அவகாசத்திற்குள் தோ்தல் பத்திரங்கள் தொடா்பான விவரங்களை கொடுப்பதற்கு கால அவகாசம் கேட்டு, பாஜக அரசின் முறைகேடுகளை மூடி மறைக்க பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகம் உதவுவதாகக் கூறி அதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எல்லைப் போராட்ட தியாகி கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.ஆா்.சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் சிலம்பரசன், கிளைச் செயலாளா் ஆட்டோ முருகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காவேரி, முன்னாள் வட்டாரத் தலைவா் சண்முகம், நிா்வாகிகள் பழனி, மாதேஷ், வேடியப்பன், குமரேசன், சக்திவேல், ரத்தினம், மணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...