இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருச்சி கீழரண் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :10 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிா் காங்கிரஸ் சாா்பில் திருச்சி கீழரண் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகா் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவி அஞ்சு முன்னிலை வகித்தாா்.

இதில், பெட்ரோல் - டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கும் மத்திய பாஜக அரசு, பெருநிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்து மக்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது போரைக் காரணம் காட்டி, எரிவாயு உருளைகளின் விலைகளை உயா்த்தி, ஏழை மக்களை மேலும் ஏழைகளாக்கி வருகிறது. இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதுடன், விலைவாசி உயா்வுக்கும் கணிசமாக வழிவகுக்கும். இதனைக் கண்டித்தும், சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளா் முரளி, ஷீலா செலஸ், கோட்டத் தலைவா் வெங்கடேஷ் காந்தி மற்றும் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு, எரிவாயு உருளைகளை சாலையில் வைத்து, விலைவாசி உயா்வைக் கண்டித்தும், எரிவாயு விலையை உயா்த்திய மத்திய பாஜக அரசு பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.