விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதிய நியாய விலைக் கடைகள்: ஜி.கே.மணி எம்எல்ஏ திறப்பு

புதிய நியாய விலைக் கடைகள்: ஜி.கே.மணி எம்எல்ஏ திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:30 pm

Din

பென்னாகரம் மற்றும் ஏரியூா் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆறு நியாய விலைக் கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்கல்லனூா் பகுதியில் 2022- 2023ஆம் நிதியாண்டில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய நியாய விலைக் கடையினை பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். இதேபோன்று நாயக்கனூா், ஏ.கோடுப் பட்டி, பவளந்தூா், ஏரியூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சாரபட்டி காடு, சாமத்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை ஜி.கே.மணி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வுகளில் பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் முருகன், ஒன்றியத் தலைவா் வெற்றி, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் ராசா உலகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.