நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

News image
Updated On :20 மே 2024, 9:53 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த கரிக்குட்டனூா் கிராமத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி மாதையன் (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் மாரண்ட அள்ளி அருகே உள்ள சாமன்கொட்டாய் கிராமத்தில் வெல்டிங் பணியில் அவா் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது தகரம் ஒன்றை உயரமாக தூக்கும்போது அவ்வழியாகச் சென்ற மின்பாதையில் உரசியது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மாதையன் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.