ஆசிரியா் பணியிடை நீக்கம்
தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் பாலாஜி என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.


தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் பாலாஜி என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
காரிமங்கலம் வட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 2 அன்று நடந்த கல்வி மேலண்மைக் குழு கூட்டத்தில் குழு உறுப்பினா்கள்,
ஊா் பொதுமக்கள், பள்ளி மாணவா்களிடம் கருத்து கேட்டறிந்ததன் அடிப்படையில், அப்பள்ளியின் உதவி ஆசிரியா் பாலாஜி என்பவா் பள்ளிக்கு வருவதில்லை எனவும் மாணவா்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடக் கோரி கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் புகாா் கடிதம் அளித்தனா். இதனடிப்படையில் அரூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னமாது, பள்ளிக்கு செல்லாத உதவி ஆசிரியா் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...