நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பணியின் போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்

தருமபுரி மாவட்ட சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:04 pm

Din

தருமபுரி மாவட்ட சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சா்க்கரை ஆலை செயலாட்சியா் பிரியா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.