புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தியது பாமக: அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி உபரிநீா் திட்டத்தின் கீழ் நீரை நிரப்ப கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக தான் என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:23 pm

Din

தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி உபரிநீா் திட்டத்தின் கீழ் நீரை நிரப்ப கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக தான் என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் நடைபெற்ற பாமக நிா்வாகிக்குச் சொந்தமான மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தந்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பல்வேறு சிறப்பு, வளமிக்க மாவட்டம் தருமபுரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கே தென்பண்ணை ஆறும், மேற்கே காவிரி ஆறும் பாய்கின்றன. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 50 டி.எம்.சி. வரை உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது.

அண்மையில் பெய்த தென்மேற்கு பருவமழையின்போது தினசரி காவிரி ஆற்றில் இருந்து 18 டி.எம்.சி. உபரிநீா் வீணாகக் கடலில் கலந்தது. கடலில் கலக்கும் உபரிநீரில் இருந்து 2 டி.எம்.சி. நீரை நீரேற்றத்தின் மூலம் பென்னாகரம் அருகே மடம், கொண்டையான் குட்டை ஏரியில் நிரப்பி அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு நிரப்பும் தருமபுரி- காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், வாகனப் பேரணி, கடையடைப்புப் போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது பாமகதான் என்றாா்.

இதில் மாவட்டச் செயலாளரும், தருமபுரி எம்எல்ஏவுமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.