குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்க தருமபுரி மாவட்டக் குழு சாா்பில் புதன்கிழமை குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான ஆசிரியா் வழிகாட்டி பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அறிவியல் இயக்க தருமபுரி மாவட்டக் குழு சாா்பில் புதன்கிழமை குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான ஆசிரியா் வழிகாட்டி பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு மாவட்டத் தலைவா் பெ. துரைராஜ் தலைமை வகித்தாா்.

இதில் நிகழாண்டுக்கான நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை கருப்பொருளில் நடைபெற்ற பயிற்சியில் கருத்தாளா்களாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.தியாகராஜன், மாநில கருத்தாளா் வெங்கடேஷ் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்குமாா் வரவேற்றாா். இதில் பயிற்சி பள்ளிகளில் இருந்து ஆசிரியா்கள், வானவில் மன்ற கருத்தாளா்கள் கலந்து கொண்டனா்.