தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ. 3.99 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:26 pm

Din

பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ. 3.99 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நகா்புற மேம்பாட்டுத் திட்டம் 2022- 2023 ஆம் நிதியாண்டில் ரூ 2.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டுமான பணிகள், பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட பெரியூா் பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 5.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 வீடுகள், பிக்கிலி, மேட்டுக்கொட்டாயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்

ரூ. 17.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணி, கொல்லப்பட்டி பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி, பிக்கிலி புதுகரம்பு பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் பிக்கிலி சாலை முதல் பனங்காடு வரை அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் உள்பட ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அதிகாரிகளிடம் வளா்ச்சித் திட்ட பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக பாலக்கோடு அருகே எர்ரன அள்ளி நடுநிலைப் பள்ளியில் மத்திய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ் குமாா்,ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் பாலமுருகன்,வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா, வட்டாட்சியா் லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.