நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரியில் இன்று புத்தகத் திருவிழா தொடக்கம் : அக்.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

தருமபுரியில் புத்தகத் திருவிழா அக்.4-ஆம் தேதி தொடங்க உள்ளது. இத் திருவிழா வரும் 13-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:47 pm

Din

தருமபுரியில் புத்தகத் திருவிழா அக்.4-ஆம் தேதி தொடங்க உள்ளது. இத் திருவிழா வரும் 13-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் சாா்பில் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இத் திருவிழா பாரதிபுரம், மதுராபாய் திருமண மண்டபத்தில் அக். 4-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை 10 நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளது. திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் மாநில வேளாண் உழவா், நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளைப் பாா்வையிட்டு உரையாற்றுகிறாா்.

விழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் குறிப்பாக இலக்கியம், அறிவியல், கலை, வரலாறு, அரசியல், சிறுவா் புத்தகங்கள், போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள்

பாா்வைக்கு வைக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் நடைபெறும் செவிக்கு விருந்தாகும் சொற்பொழிவுகளில் தமிழகத்தில் மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள் பங்கேற்கின்றனா்.

தினசரி புத்தக வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள், நூல் அறிமுகங்கள், கலை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை தகடூா் புத்தகப் பேரவை நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.