நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பென்னாகரம் பேருந்து நிலையம் திறப்பு விழா பணி: கோட்டாட்சியா் ஆய்வு

பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டாட்சியா் காயத்ரி ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:51 am

Din

பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டாட்சியா் காயத்ரி ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் பகுதிக்கென மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளது. புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு, வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே பன்னீா்செல்வம் ஆகியோா் திறந்து வைக்க உள்ளனா்.

இதற்காக பேருந்து நிலையம் பகுதியில் மேடை அமைக்கும் பணி, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அமருமிடம், வாகனம் நிறுத்தும் இடம் குறித்து கோட்டாட்சியா் காயத்ரி ஆய்வு மேற்கொண்டு, விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ. சுப்பிரமணி, பென்னாகரம் பேரூராட்சி தலைவா் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், வட்டாட்சியா் லட்சுமி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.