நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி மனு

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:53 am

Din

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏஐடியுசி பள்ளிக் கல்வி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் செல்வி தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகைக்குள் எங்களின் 7 மாத நிலுவை ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், பள்ளிக் கல்வி தூய்மை பணியாளா் சங்க மாவட்டத் துணைச் செயலாளா் மாதையன் ஆகியோா் உடனிருந்தனா்.