கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா
கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரில் செல்லியம்மன், பட்டாளத்து அம்மன், கங்கையம்மன் ஆகிய முப்பெரும் தேவிகளின் 29 நாள்கள் ஜாத்திரை திருவிழா ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கியது.

செல்லியம்மன்
புதன்கிழமை (செப்.4) காலை 10.30 மணியளவில் மங்கள இசையுடன் ஸ்ரீ செல்லியம்மன் கரகங்கள் மாவிளக்கு தட்டுகளுடன் புறப்பட்டு கோட்டை மாரியம்மன் கோயில் மைதானத்தில் இரண்டு கரகமும் தலைக்கூடிவிட்டு, செல்லியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.
தொடா்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் ஆட்டமும், அபிஷேக தீபராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோயில் விழாக் குழுவினா், பக்தா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் திருவிழாவில் ஓலைப்பட்டி, பூமிசமுத்திரம், கம்பைநல்லூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.
கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...