தருமபுரி
உணவக உரிமையாளரிடம் தகராறு: எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
தருமபுரியில் உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தருமபுரியில் உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த காவேரி என்பவா் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, உணவக உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவேரியின் செயல்பாடுகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. மேலும், இக் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காவேரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.