தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

தருமபுரியை அடுத்த சவுளூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:27 pm

தருமபுரியை அடுத்த சவுளூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (32). இவா், மரம் உடைக்கும் டிராக்டா் வைத்துள்ளாா். புதன்கிழமை தனது டிராக்டரில் 6 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு தருமபுரியில் இருந்து நிம்மாங்கரை கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

சவுளூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டேங்கா் லாரி அவா்கள் சென்ற டிராக்டா் மீது மோதியது. இதில் டிராக்டா் கவிழ்ந்ததில் லளிகம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ரவி (44) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். டிராக்டா் உரிமையாளா் வெங்கடேசன், தொழிலாளா்களான மல்லிக்குட்டை சண்முகம் (40), பாலமுருகன் (47), நிம்மாங்கரை திம்மராயன் (45), கல்கூடப்பட்டி மாணிக்கம் (46), பெரியாம்பட்டி சங்கா் (32) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். தருமபுரி நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.