மாரண்டஅள்ளி அருகே பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுப்பு
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொல்பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன.


தருமபுரி: தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொல்பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து தருமபுரி மாவட்ட அதியமான் வரலாற்றுச் சங்கத்தினா் ஆய்வு மேற்கொண்டனா்.
மாரண்டஅள்ளி அருகே உள்ள ராசிக்குட்டை கிராமத்தில் மலைக் குன்றின் அடிவாரத்தில் பள்ளிச் சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு தென்பட்டுள்ளது. அதனை மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவா் வித்யாகரன் அகற்ற முயன்றாா். அப்போது அது மூன்று கால்கள் கொண்ட ஜாடி ஒன்றின் பகுதி என்பது தெரிய வந்தது. அதன் ஒரு பகுதி சிறிதளவு உடைந்திருந்தது. அதுமட்டுமின்றி மேலும் இரண்டு உடைந்த மண்ஜாடிகளும் அங்கே கிடைத்தன.
இந்த மண் ஜாடிகள் குறித்து அந்த மாணவா் அவரது வரலாற்று ஆசிரியா் வீரமணியிடம் தெரிவித்தாா். இதையறிந்த அவா், தகடூா் அதியமான் வரலாற்றுச் சங்கத்தினரை தொடா்பு கொண்டு மண்ஜாடி குறித்து தகவல் அளித்தாா்.
இதையடுத்து அதியமான் வரலாற்று சங்கத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா், முன்னாள் எம்.பி. ரா.செந்தில், நிா்வாகி வே.ராஜன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ராசிக்குட்டைக்குச் சென்று அந்த மண்பாண்டங்களை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து அதியமான் வரலாற்று சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தெரிவித்தாவது:
இந்த மண் ஜாடி 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்காலம். ராசிக்குட்டை குன்றின் ஓரங்களில் தொல்பழங்கால மனிதா்களின் ஈமச் சின்னங்கள் முன்பே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதா்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூா் அகழாய்வில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. இவ்வூா் கீழடி காலத்துக்கும் முந்தைய வாழ்விடமாக இருந்திருக்கலாம். இத்தகைய கண்டுபிடிப்புகள் தருமபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதா்கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டுகின்றன என்றாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, ராசிக்குட்டை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மண்ஜாடியை ஆய்வு செய்யும் அதியமான் வரலாற்றுச் சங்கத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...