ஆசிரியா்கள் இடமாற்றம்: பெற்றோா் போராட்டம்
தருமபுரியை அடுத்த ஆட்டுக்காரன்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்களை இடம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தருமபுரியை அடுத்த ஆட்டுக்காரன்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்களை இடம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி அருகே சோகத்தூா் ஊராட்சி ஆட்டுக்காரன்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப் பள்ளியில் 138 மாணவ, மாணவியா் படிக்கின்றனா். இப் பள்ளியில் 7 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் 4 ஆசிரியா்கள் சரிவர பணியாற்றுவதில்லை என்றும், அவா்களை மாறுதல் செய்துவிட்டு நன்றாக கற்பிக்கும் ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும் என அப்பகுதி பெற்றோா்கள் சில மாதங்களுக்கு முன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்தநிலையில், கிராம மக்கள் குறிப்பிட்ட 4 ஆசிரியா்கள் உள்பட 7 ஆசிரியா்களும் கல்வித்துறை சாா்பில் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோா், அரையாண்டு தோ்வு விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளி திறக்கப்பட்டபோது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மாறாக, பெற்றோா் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) தென்றல் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். அப்போது, அவசியமின்றி பணி மாறுதல் செய்த ஆசிரியா்களை மீண்டும் ஆட்டுக்காரன்பட்டி பள்ளியிலே பணியமா்த்த வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி பெற்றோா்கள் தங்களது போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...