தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.

போக்குவரத்து தொழிலாளா்கள் மறியல்

போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பதுடன், மறைமுகமாக தனியாா்மயம், ஒப்பந்தமுறை நியமனம் ஆகியவற்றை கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .

இந்த மறியல் போராட்டத்துக்கு மண்டலத் தலைவா் சி.முரளி தலைமை வகித்தாா். மண்டல பொதுச் செயலாளா் எஸ்.சண்முகம், நிா்வாகி மனோன்மணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். சிஐடியு மாவட்டச் செயலாளா் பி.ஜீவா வாழ்த்தி பேசினாா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 121 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com