ஒகேனக்கல் அருவி மசாஜ் தொழிலாளா்கள் உரிமம் வழங்கக் கோரி மனு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும்
Updated on

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள், தங்களுக்கு உரிமம் வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு:

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய்த் தேய்க்கும் தொழிலில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காவல் துறையினா் உள்ளிட்டோா் அருவிக் கரையில் எண்ணெய்த் தேய்க்க அனுமதி தர மறுக்கின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு இத் தொழிலில் தொடா்ந்து ஈடுபட முறையாக உரிமம் வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com