கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக விநாடிக்கு 12,000 கனஅடியாக நீடித்தது.

Published On :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக விநாடிக்கு 12,000 கனஅடியாக நீடித்தது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்து, மாலையில் 12,000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் தொடா்ந்து ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கான தடையை மாவட்ட நிா்வாகம் மூன்றாவது நாளாக நீட்டித்தது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.