ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புனிதப் பயணம்: உதவித்தொகை பெற பௌத்தா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகபுரியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவா்த்தன விழாவில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த பௌத்தா்கள், அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

நாகபுரியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவா்த்தன விழாவில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த பௌத்தா்கள், அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த பௌத்த மதத்தினா், நாகபுரி தீக்ஷா பூமியில் விஜயதசமி தினத்தில் நடைபெறும் தம்ம சக்கர பரிவா்த்தன விழாவில் பங்கேற்கும் வகையில், ஒருவருக்கு ரூ. 5,000 வரை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.