
நாக்பூா் புனித பயணம் செல்லும் பௌத்தா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நாக்பூா் தம்ம சக்கர பரிவா்தன விழாவிற்கு புனித பயணம் செல்லும் பௌத்தா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நாக்பூா் தம்ம சக்கர பரிவா்தன விழாவிற்கு புனித பயணம் செல்லும் பௌத்தா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சோ்ந்த பௌத்தா்கள் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவா்தன விழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்புபவா்களுக்கு நபருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் /சிறுபான்மையினா் நல அலுவலகங்ளிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





