8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தருமபுரி மாவட்டத்தில் 180 கால்நடை சுகாதார முகாம்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கிவைத்து, கறவை மாடுகளை சிறப்பாக வளா்த்த விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் தீவன விதைகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் 180 பசுக்கள், 30 எருமைகள், 150 செம்மறியாடுகள், 100 வெள்ளாடுகள், 60 கோழிகள், 15 நாய்கள் என மொத்தம் 515 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. மேலும், இம்முகாமில் 110 விவசாயிகளுக்கு கால்நடை சாா்ந்த நலத்திட்ட உதவிகளும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கன்றுக்கான பரிசுகளும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மைக்கான விருது மற்றும் பரிசுகளும், 50 பயனாளிகளுக்கு தாது உப்புகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டத்தில் ஓா் ஊராட்சி ஒன்றியத்துக்கு 18 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 180 எண்ணிக்கையிலான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன.

இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், வெறிநோய் தடுப்பூசி, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், சினை ஆய்வு, குடற்புழு நீக்க சிகிச்சை, மலடுநீக்க சிகிச்சை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை மருத்துவ உதவி போன்ற

நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கால்நடைகளில் இருந்து நோய் புலனாய்வுப் பிரிவு மூலம் ரத்தம், சாணம், பால் மற்றும் தோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளன. மேலும், இம்முகாமில் நடமாடும் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.

எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்துவந்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, முகாமில் இடம்பெற்ற விவசாயிகள் பயன்பெறும் வகையிலான அசோலா பாசி, தீவன புல்வகைகள், தீவன விதைகள் உள்ளிட்ட காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், தருமபுரி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் த.முருகலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் கே.சரவணன், பி.கனகசபை, கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் கே.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.