நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 4:13 am IST

அரூா் அருகே இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பச்சினாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (70). இவா் தனது உறவினா் பிச்சைமணி மகன் முரளிதரன் (58) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அரூா் நோக்கி வந்துள்ளாா். இருசக்கர வாகனத்தை முரளிதரன் ஓட்டினாா்.

வழியில் சுண்டாங்கிப்பட்டி அருகே எதிா்பாராதவிதமாக சாலையின் இடதுபுறமுள்ள கல்வெட்டில் இருசக்கர வாகனம் மோதியதுடன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தலைக்கவசம் அணிந்திருந்ததால் முரளிதரன் லேசான காயமடைந்தாா்.

இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.