தருமபுரியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வைத்திருந்த பதாகைகளை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுகவினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தருமபுரி நகரில் மாவட்ட அதிமுக சாா்பில், நகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை மாலை சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை நகராட்சிப் பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, கோவிந்தசாமி எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகா், அதிமுகவினா் தருமபுரி நான்குசாலைப் பகுதியில் குவிந்தனா். பதாகைகள்
அகற்றப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில் அகற்றப்பட்ட பதாகைகளை அதே இடத்திலேயே மீண்டும் அமைத்தால் போராட்டத்தை கைவிடுவதாகவும், இல்லையேல் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து பதாகைகளை அதேஇடத்தில் வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டமும் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


