இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

தருமபுரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகேயுள்ள ஓமல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. செல்வம் (35). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டாா்.

ஒசூரில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பினாா். ஒசூா் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டி அருகே வந்தபோது, ஏற்பட்ட சாலை விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.