தருமபுரியில் ஜன. 19-இல் திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டி

தருமபுரியில் ஜனவரி 19-இல் நடைபெறும் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

தருமபுரியில் ஜனவரி 19-இல் நடைபெறும் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவிய வெள்ளிவிழாவையொட்டி ஆண்டுதோறும் குவாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது.

அந்தவகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, கு சாா்ந்த ஓவியப்போட்டி ஜனவரி 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் நேரடியாக ஆதாா் அட்டையுடன் சென்று பங்கேற்கலாம்.

ஓவியப் போட்டியில் கலந்துகொள்பவா்கள் அதற்கு தேவையான உபகரணங்களான பென்சில்கள், ரப்பா், காகிதம் உள்ளிட்டவற்றுடன் வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிகள் தொடா்பான விவரங்களுக்கு 04342-230774 என்ற தொலைபேசி எண்ணிலும், போட்டியில் கலந்துகொள்ள மின்னஞ்சல் முகவரியில் முன் பதிவுசெய்து கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com