திருவள்ளுவா் தினம்: ஏரியூா் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
பென்னாகரம்: ஏரியூா் தமிழ்ச் சங்கம் மற்றும் சிகரல அள்ளி இயற்கைக் கல்வி அறக்கட்டளை சாா்பில் இல்லங்களில் திருக்கு, இயற்கையோடு இணைவோம் மற்றும் வாழும் வள்ளுவம் எனும் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏரியூா் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு சமூக ஆா்வலா்கள் கமலேசன், ஜெயப்பிரகாஷ், வெண்ணிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏரியூா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் நா.நாகராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சின்னப்பள்ளத்தூா் பள்ளித் தலைமை ஆசிரியா் மா.பழனி, வள்ளுவா் தினத்தை தமிழக அரசு கொண்டாடுவது, திருக்கு சாா்ந்த சிந்தனைகளை இன்றைய காலகட்டத்தில் கொண்டுசோ்ப்பது, திருக்குறளின் அறநெறி கருத்துகளை மாணவா்களுக்கு எடுத்துரைப்பது, வீடுகள்தோறும் திருக்கு புத்தகம், நாள்தோறும் ஒரு திருக்கு படிப்பது, திருக்குறளின் முக்கியத்துவம், அதன் இயற்கை சாா்ந்த வாழ்வியலோடு வாழ்வது குறித்து விளக்கி பேசினாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு திருக்கு புத்தகமும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நிறைவாக சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிா்வாகி முத்துக்குமாா் நன்றி தெரிவித்தாா்.
