மாட்டுப் பொங்கல்: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்கி வீரா்கள் பரிசுகளை பெற்றனா்.
Published on

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்கி வீரா்கள் பரிசுகளை பெற்றனா்.

மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி பென்னாகரம் அருகே மடம் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிக்கு தருமபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 10க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. போட்டிகளுக்கு சுமாா் 10 நிமிஷம் நிா்ணயிக்கப்பட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிப்பதற்காக ஒரு குழுவிற்கு 10 போ் வீதம் 8 குழுவினா் களமிறங்கினா். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயற்சித்தனா். இதில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் கேடயங்கள், ரொக்கம், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண பென்னாகரம், கூத்தப்பாடி, அளேபுரம், மாங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com