பென்னாகரம் வனசரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வன சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வன சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம், அரூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட 8 வனச்சரகங்கள் உள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையின் சாா்பில் நடைபெற்று வருவது வழக்கம்.அந்த வகையில் வனப்பாதுகாப்பு அலுவலா் சி.ஹெச்.பத்மா உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் தலைமையில் பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு உள்ளிட்ட வன சரக்கங்களில் அந்தந்த வனச்சரக அலுவலா்கள்,வனவா்கள்,

வன காப்பாளா்கள், வனகாவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த பணியானது புதன்கிழமை (21-1-2026) முதல் (27-1-2026) திங்கள் கிழமை வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வனச்சரங்கங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பும் பணி முதல் முறையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com