பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மாநில கிரிக்கெட் போட்டி: தருமபுரி மாவட்ட அணிக்கு ஆக. 2 இல் வீரா்கள் தோ்வு

23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

கிரிக்கெட்

Updated On :31 ஜூலை 2026, 12:50 am IST

23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் மாா்டின்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் மாநில, மாவட்டங்களுக்கு இடையே 23 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தருமபுரி கமலம் இன்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் உள்ள வலைப்பயிற்சி மையத்தில் நடைபெறும்.

இந்தத் தோ்வு முகாமில் 2003-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கலாம். தோ்வு முகாமில் பங்கேற்பவா்கள் ஆதாா் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல்களை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94870 15007 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.