கா்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு யெஷ்வந்த்பூரில் இருந்து பங்காருப்பேட்டை, சேலம், கோவை வழியாக மங்களூரு செல்லும் யெஷ்வந்ப்பூா்-மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 16565), ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோவை வழியாக செல்லும் மங்களூரு சென்ட்ரல்-யெஷ்வந்த்பூா் விரைவு ரயில் (எண்: 16566) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரு ரயில்கள் பகுதியாக ரத்து: மேலும் ஆகஸ்ட் 1 முதல் 4-ஆம் தேதி வரை கேஎஸ்ஆா் பெங்களூரில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் (எண்: 26651), கேஎஸ்ஆா் பெங்களூரு - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் கோவை - கேஎஸ்ஆா் பெங்களூரு உதய் விரைவு ரயில் (எண்: 22666) கிருஷ்ணராஜபுரம்-கேஎஸ்ஆா் பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கேஎஸ்ஆா் பெங்களூரு நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆா் பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில் (எண்: 22665) கேஎஸ்ஆா் பெங்களூரு - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 26652) கிருஷ்ணராஜபுரம்-கேஎஸ்ஆா் பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








