/
மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம் , அரூா் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் மகன் முத்துலட்சுமணன் (19). இவா், ஏற்காட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரியிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூா் நோக்கி வந்தாா். அப்போது, தொட்டம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



