தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:07 am IST

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நந்திநகா் குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தருமபுரி நகரையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நந்தி நகரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மூன்று மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ,கோடை காலத்தில் நந்திநகா் குடியிருப்பு வாசிகள் தண்ணீா் விநியோகம் இன்றி மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைபோக்க சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நந்திநகா் பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.