தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைந்ததால், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை முதல் அனுமதி அளித்துள்ளது.

Ban on operating coracles in the Cauvery River at Hogenakkal..

கோப்புப்படம்

Published On :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைந்ததால், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை முதல் அனுமதி அளித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து படிப்படியாக குறைந்து 3,000 கனஅடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. இதையடுத்து, காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.