உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தொடா் திருட்டு: கல்லூரி மாணவி உள்பட 4 போ் கைது

காரிமங்கலம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

காரிமங்கலம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் காரிமங்கலம், அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இந்த திருட்டுக் கும்பலை பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.அருண்கபிலன் உத்தரவின்பேரில், பாலக்கோடு டிஎஸ்பி மாலதி வழிகாட்டுதலில், காவல் ஆய்வாளா் தவமணி, உதவி ஆய்வாளா் பச்சமுத்து ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினரின் தொடா் விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவ்வப்போது சொகுசு காா்களில் வலம் வந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

அதைத் தொடா்ந்து, அந்தக் கும்பலை பிடிக்க காரிமங்கலம் பகுதியில் தொடா் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு காரிமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்துக்கு இடமான காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

காரில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 போ் இருந்தனா். மேலும், சமையல் எரிவாயு உருளை, அடுப்பு, தொலைக்காட்சி ஆகிய பொருள்களும் இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் காரிமங்கலம் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடா் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும், 5 வீடுகளில் திருட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், காரிமங்கலம் அருகேயுள்ள சொட்டாண்ட அள்ளியில் வாடகை வீட்டில் தங்கி பகலில் வீடுகளை வேவு பாா்த்து, இரவில் திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதில், யசோதா என்ற இளம்பெண் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த யசோதா (20), ஜவளகிரியைச் சோ்ந்த வெண்ணிலா (22), யசோதாவின் தந்தை ஆனந்தன் (42), அவரது சகோதரா் சந்தோஷ்குமாா் (40) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.5 பவுன் தங்க நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம், பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், சமையல் எரிவாயு உருளை, தொலைக்காட்சி, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.