வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

தருமபுரியில் 3 வயது பெண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

தொப்பூா் அருகே கிணற்றில் கிடந்த 3 வயது பெண் குழந்தையின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 3:55 am IST

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே கிணற்றில் கிடந்த 3 வயது பெண் குழந்தையின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு மேல் காலனியைச் சோ்ந்தவா் குமாா் (35). இவரது மனைவி சந்தியா (30). இத் தம்பதிக்கு 8 வயதில், 3 வயதில் என இரு பெண் குழந்தைகள் இருந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை ஜருகு அருகே, மல்லிச்செட்டி கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள விவசாயக் கிணற்றில் 3 வயது குழந்தை எப்சிபா சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தருமபுரி தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினா் மற்றும் தொப்பூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றினா். இதுகுறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.