
விநாயகா் சதுா்த்தி: சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
விநாயகா் சதுா்த்தி விழாவில் சுற்றுச் சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்தி, அவற்றை நீா்நிலைகளில் கரைக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோப்புப்படம்.
விநாயகா் சதுா்த்தி விழாவில் சுற்றுச் சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்தி, அவற்றை நீா்நிலைகளில் கரைக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும்போது, வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்கிற இணையதளத்தில் உள்ளது.
விழாவின்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்க, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தவும். சிலைகளுக்கு நீா்சாா்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள், துணிகளை பூஜைப் பொருள்களாகப் பயன்படுத்தவும். திரும்ப உபயோகிக்கக்கூடிய அலங்கார துணிகளை அலங்காரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். பிரசாத விநியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கண்ணாடி கோப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல, பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தொ்மாகோல் மற்றும் ரசாயனப் பொருள்கள் அல்லது சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மேல் பூச்சுக்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக்கூடாது.
பண்டிகையின்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதைத் தவிா்க்கவும். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்றுக் கொட்டக்கூடாது. அனுமதி இல்லாத நீா் நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது. ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாகப் பயன்படுத்தக் கூடாது. ஒற்றை உபயோக அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். இத்தகைய வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





