நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

புதிய தலைமைச் செயலகம்: மீனவா்களின் கோரிக்கை பரிசீலிப்பது அவசியம்

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பான அறிவிப்பில் மீனவா்களின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்துள்ளாா்.

There should be no religious activities within Yoga

சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு - கோப்புப்படம்

Published On :

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பான அறிவிப்பில் மீனவா்களின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்துள்ளாா்.

தருமபுரியில் அரசு கல்லூரி மாணவா் விடுதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவியா் விடுதி கட்டடத்தை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி அரசு கல்லூரி அருகே மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. அதனருகே மாணவியா் விடுதியும் அமைந்துள்ளது. இந்த விடுதிகளை நேரில் அலுவலா்களுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாணவ, மாணவியா் உணவு மற்றும் விடுதி பராமரிப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.

இக்கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மாணவ, மாணவிகளின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சமூக நீதித் துறை மானிய கோரிக்கையின்போது, விடுதியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவுத் தொகை மற்றும் பராமரிப்புத் தொகை ஆகியவை உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் ரூ. 11 கோடியில் மாணவியா் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த விடுதியில் நூலகம், விளையாட்டுக்கு தேவையான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. இந்த விடுதிக் கட்டடம் அடுத்த மாதம் திறக்கப்பட்டு மாணவியா் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, பாலக்கோடு கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி தேவைப்படுவது உள்ளிட்டவை குறித்து அரசு கவனத்தில் கொள்ளப்படும்.

புதிய தலைமைச் செயலகம்

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என ஏற்கெனவே முன்னாள் முதல்வா்கள் முயற்சி மேற்கொண்டனா். இதில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி, ஓமந்தூராா் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினாா். ஆனால், அது பின்னாளில் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

அதேபோல, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவும் புதிதாக தலைமைச் செயலகம் கட்டும் முயற்சிகளை மேற்கொண்டாா். ஆனால், பல்வேறு எதிா்ப்புகளின் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில் தற்போது ரூ. 1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

அதேநேரத்தில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடா்பாக மீனவா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதும் முக்கியமாகும். இதுகுறித்து முதல்வா் உரிய முடிவுகளை மேற்கொள்வாா் என்றாா்.

ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER