பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதிய தலைமைச் செயலகம் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும்

புதிய தலைமைச் செயலகம் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும் என பாமக சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி கூறினாா்.

சௌமியா அன்புமணி. - கோப்புப் படம்

Published On :

புதிய தலைமைச் செயலகம் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும் என பாமக சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி கூறினாா்.

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்நிலை பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் இத்திட்டப் பணிகள் முழுமையாக முடிந்துவிடும். தற்போது பணிகள் நடைபெறுவதால், கணவாய் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மொரப்பூா் - தருமபுரி ரயில் பாதை திட்டத்துக்கு 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், ரயில்வே துறைக்கு ஒப்படைத்தால் அவா்கள் பாதை அமைக்கும் பணியை தொடங்கிவிடுவாா்கள். தற்போது 40 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளது.

மின் விநியோகத்தை சீா்செய்ய வேண்டும். குறைந்தபட்சம் காலை வேளைகளில் தடையின்றி மின் விநியோகம் இருக்க வேண்டும்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் பாமக தனது கருத்தை ஏற்கெனவே பதிவு செய்துள்ளது. புதிய தலைமைச் செயலகம் பொதுமக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.