காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

காவிரி ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநில தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

பிரதிப் படம்

Published On :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநில தனியாா் நிறுவன ஊழியரின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு விவேக் நகா் பகுதியைச் சோ்ந்த அனில் கோச்சா் (42), பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் 5 பேருடன் ஒகேனக்கல்லுக்கு வந்த அவா், ஊட்டமலை அருகே காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியின் பின்புறமுள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் அனில் கோச்சா் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேடிவந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதலைப் பண்ணை பகுதியில் அனில் கோச்சா் உடல் மீட்கப்பட்டது. பின்னா், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.