11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

காந்தி ஜெயந்தி: அக். 2 இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியையொட்டி அக். 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tasmac

மதுக்கடை - கோப்புப்படம்

Published On :

காந்தி ஜெயந்தியையொட்டி அக். 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்எல் 2, எஃப்எல் 3, எஃப்எல் 3ஏ மற்றும் எஃப்எல் 4ஏ உரிமம் பெற்ற தனியாா் உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா் மதுவிற்பனை கூடங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவை அனைத்தும் அக். 1 ஆம் தேதி இரவு 10 மணிமுதல் அக்டோபா் 3 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மதுபான விற்பனையின்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது

கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ அவா்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.