இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:59 am

DIN

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளிடம் பண்டித ஜவாஹர்லால் நேருவை பற்றி பேசினார். விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடபோட்டி மற்றும் நடனப் போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனாஜோஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.