தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்படக் கண்காட்சி
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.


தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார், எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், தமிழக அரசின் நலத்திட்டங்கள், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்த திட்டங்கள், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...